search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரஷியா பயணம்"

    முதலாம் உலக போர் நினைவு நாளில் பங்கேற்க ரஷியா செல்லும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அங்கு அதிபர் புதினை சந்திக்க உள்ளார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. #WorldWarI #DonaldTrump #VladimirPutin
    வாஷிங்டன்:

    1918-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11-ம் தேதி முதலாம் உலக போர் நடைபெற்றது. இந்த போரின் நூற்றாண்டு நினைவு தினம் அடுத்த மாதம் ரஷியாவில் அனுசரிக்கப்பட உள்ளது. இதில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு ரஷியா அதிபர் விளாடிமிர் புதின் அதிபர் டிரம்புக்கு அழைப்பு விடுத்துள்ளார். அவரது அழைப்பை ஏற்று அதிபர் டிரம்ப் அடுத்த மாதம் மாஸ்கோ செல்கிறார்.



    இதுதொடர்பாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பால்டன் கூறுகையில், ரஷியாவில் நடைபெறும் முதலாம் உலக போர் நூற்றாண்டு நினைவு நாள் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அதிபர் டிரம்ப் செல்கிறார். அவர் பாரிசில் நவம்பர் 11-ம் தேதி ரஷிய அதிபர் புதினை சந்திக்கிறார். அப்போது இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேசவுள்ளார் என தெரிவித்தார். #WorldWarI #DonaldTrump #VladimirPutin
    ரஷியாவுக்கு அரசுமுறை சுற்றுப்பயணமாக சென்ற பிரதமர் மோடி ஒருநாள் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று இந்தியாவுக்கு வந்தடைந்தார். #ModiInRussia #PMModi

    புதுடெல்லி:

    ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் முறைசாரா பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பிரதமர் மோடி நேற்று ரஷியா சென்றார். சோச்சி நகரில் நடந்த சந்திப்புக்கு வருகை தந்த மோடியை, புதின் கைக்குலுக்கி கட்டியணைத்து வரவேற்றார். இதனை அடுத்து, இரு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விவாதித்தனர்.

    இந்த பேச்சுவார்த்தைக்கு என்னை அழைத்ததற்கு அதிபர் புதினுக்கு நன்றி. ஷாங்காய் கூட்டுறவு அமைப்பில் இந்தியா நிரந்தர உறுப்பினராகும் விஷயத்தில் ரஷியா முக்கிய பங்களித்து வருகிறது. பிரிக்ஸ் மற்றும் ஐஎன்எஸ்டிசி அமைப்புகள் மூலம் இரு நாடுகளும் ஒன்றினைந்து பணியாற்றுவோம் என பேச்சுவார்த்தையின் போது மோடி கூறினார். 

    இதையடுத்து, புதினுடன் நடந்த பேச்சுவார்த்தையை நிறைவு செய்த பிரதமர் மோடி நேற்றிரவு இந்தியாவுக்கு புறப்பட்டார். சோச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடியை, ரஷிய அதிபர் புதின் நேரில் வந்து கட்டியணைத்து, கை குலுக்கி வழியனுப்பி வைத்தார். 



    ஒருநாள் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி இன்று நாடு திரும்பினார். அதிகாலை 4 மணியளவில் டெல்லி விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். #ModiInRussia #PMModi
    ரஷியாவுக்கு அரசுமுறை சுற்றுப்பயணமாக சென்ற பிரதமர் மோடி சோச்சி நகரில் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திவிட்டு இந்தியாவுக்கு புறப்பட்டார். #ModiInRussia

    மாஸ்கோ:

    ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் முறைசாரா பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பிரதமர் மோடி ரஷியா சென்றார். சோச்சி நகரில் நடந்த சந்திப்புக்கு வருகை தந்த மோடியை, புதின் கைக்குலுக்கி கட்டியணைத்து வரவேற்றார். இதனை அடுத்து, இரு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விவாதித்தனர்.

    “இந்த பேச்சுவார்த்தைக்கு என்னை அழைத்ததற்கு அதிபர் புதினுக்கு நன்றி. ஷாங்காய் கூட்டுறவு அமைப்பில் இந்தியா நிரந்தர உறுப்பினராகும் விஷயத்தில் ரஷியா முக்கிய பங்களித்து வருகிறது. பிரிக்ஸ் மற்றும் ஐஎன்எஸ்டிசி அமைப்புகள் மூலம் இரு நாடுகளும் ஒன்றினைந்து பணியாற்றுவோம்” என பேச்சுவார்த்தையின் போது மோடி கூறினார். 



    இதையடுத்து, புதினுடன் நடந்த பேச்சுவார்த்தையை நிறைவு செய்த பிரதமர் மோடி இந்தியாவுக்கு புறப்பட்டார். சோச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடியை, ரஷிய அதிபர் புதின் நேரில் வந்து கட்டியணைத்து, கை குலுக்கி வழியனுப்பி வைத்தார். #ModiInRussia
    ×